close
Choose your channels

10,700 திரையரங்குகளில் இன்று வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்: திரையுலகினர் வாழ்த்து!

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’கனா’ திரைப்படம் சீனாவில் இன்று 10 ஆயிரத்து 700 திரையரங்குகளில் வெளியாவதை அடுத்து கோலிவுட் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .

சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கனா’. இந்த படம் தமிழ் தெலுங்கு திரையுலகில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தை சீன மொழியில் டப் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் இன்று சீனாவிலுள்ள 10 ஆயிரத்து 700 திரையரங்குகளில் ’கனா’ திரைப்படம் வெளியாகிறது. சீனாவில் பாகுபலி அடுத்து படத்தை அடுத்து வெளியாகும் தென்னிந்திய திரைப்படம் ’கனா’ மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனாவில் 10 ஆயிரத்து 700 திரையரங்குகளில் இன்று ’கனா’ திரைப்படம் வெளியாவதை அடுத்து சீனாவிலும் இந்த படம் வெற்றியடைய நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.