சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்: ஃபர்ஸ்ட்லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,April 21 2017]

கோலிவுட் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்த நடிகர் சிவகார்த்டிகேயன், 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்களின் வெற்றிக்கு பின்னர் தற்போது 'வேலைக்காரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன்முதலாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் ரிலீஸ் தேதிகளை தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஜூன் 5ஆம் தேதி ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் என்றும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். ராம்ஜி ஒளிப்பதிவில், விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சத்யராஜ் மகள் திவ்யாவின் பயனுள்ள முயற்சி

'பாகுபலி 2' பிரச்சனை சுமூகமாக முடிய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் சத்யராஜ் சற்று முன்னர் கன்னட மக்களிடம் தான் ஒன்பது வருடங்களுக்கு பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் என்பதை பார்த்தோம்.

சத்யராஜை கன்னடர்கள் குறிவைப்பது ஏன்? எஸ்.வி.சேகர்

காவிரி பிரச்சனையின்போது கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன் சத்யராஜ் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் 'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டிடிவி தினகரனுக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை - தீபா

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நாளை டெல்லி போலீசார் முன் டிடிவி தினகரன் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

'பாகுபலி' பிரச்சனை குறித்து சத்யராஜ் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தில் கட்டப்பா என்ற கேரக்டரில் நடித்துள்ள சத்யராஜ், கன்னட மக்களின் மனதை புண்புடும்படி கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன் பேசியதால், அவர் மன்னிப்பு கேட்கும் வரை கர்நாடகாவில் பாகுபலி 2 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்' என்று கன்னட அமைப்புகள் கூறி வந்தன.

தல ரசிகர்களே! இந்த இரண்டையும் பெல்கிரேடுக்கு அனுப்புங்கள். விவேக் ஓபராய்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் நிலையில் மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...