இன்னா செய்தாரை வச்சு செய்துவிடல்: 'Mr.லோக்கல்' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Sunday,May 05 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

'எல்லோருக்கும் அவன பிடிக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு' என்ற வசனத்துடன் ஆரம்பமாகும் டிரைலர், 'காம்ப்ளான் குடிச்சதால வளர்ந்துட்டேன்', 'சொடக்கு போட்டு கூப்பிடுற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்', 'இன்னா செய்தாரை அவர் நாண உடனே வச்சு செய்து விடல்', 'நீ வந்ததுக்கு அப்புறம்தான் தோனி விளையாட்ற டி20 மாதிரி இருக்குது', 'கோகிலா கோகிலான்னு ஒருத்தி கோலமாவு வித்தாளாம், டப்பாவை திறந்து பாத்தா உள்ளே இருந்தது கோகைனாம்', போன்ற வசனங்களில் ரசிகர்களின் கவனத்தை பெறுகிறார் சிவகார்த்திகேயன்.

நயன்தாராவுக்கு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சமமான கேரக்டர் போல் தெரிகிறது. சொடக்கு போட்டு கூப்பிடும் திமிர்த்தனம், விதவிதமான காஸ்ட்யூம்களில் அழகு, 'மன்னன்' விஜய்சாந்தியை ஞாபகப்படுத்தும் கெத்து என தெறிக்க விடுகிறார்.

யோகிபாபு, சதீஷ், ரோபோ சங்கர், என மூன்று காமெடியன்கள் இருப்பதால் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்று தெரிகிறது. அதிலும் ராஜேஷ் எம் படம் என்றால் அதில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் இருக்கும். ஒரு ஜாலியான படத்திற்கேற்ப பின்னணி இசையும் பாடல்களும் ஹிப் ஹாப் தமிழா இசையில் அமைந்துள்ளன. படம் முழுவதும் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு என படத்தில் பல பாசிட்டிவ்கள் தெரிவதால் கோடை விடுமுறைக்கேற்ற குழந்தைகள் ரசிக்கும் ஒரு ஜாலியான படமாக இருக்கும் என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.