சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'. ஃபர்ஸ்ட்லுக், ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,February 20 2017]

ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'வேலைக்காரன்' என சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'வேலைக்காரன்' படத்தின் ஃபர்ஸ்லுக் லுக் வரும் உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதியும், படம் வரும் விநாகர் சதூர்த்தி தினமான ஆகஸ்ட் 25ஆம் தேதியும் வெளிவரும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன், பாஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் என பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் அனிரூத், ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த வேலைக்காரன் படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.

More News

சசிகலா தியாகி, ஓபிஎஸ் துரோகியா? விஜயசாந்திக்கு கடும் கண்டனம்

தமிழக சட்டசபையில் கடந்த சனிக்கிழமை நடந்த ஜனநாயக கேலிக்கூத்து அனைவரும் அறிந்ததே.

ஐபிஎல் வீரர்கள் ஏலம். ரூ.3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்.

10வது ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தொடங்கவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த ஐபிஎல் போட்டியில் எட்டு அணிகள் மோதுகின்றன.

மேலும் 500 மதுக்கடைகள் மூடல். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் முதல் உத்தரவு

தமிழக முதல்வராக கடந்த வாரம் பதவியேற்று சர்ச்சைக்குரிய வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக கூறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சற்று முன்னர் தலைமைச்செயலகம் வந்தார்.

பாவனா விவகாரம்: கேரள முதல்வருக்கு நடிகர் விஷால் எழுதிய அவசர கடிதம்

நடிகை பாவனா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது நடந்த அசம்பாவித சம்பவத்தால் கேரள திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

வரவேற்கப்படும் 11 . ஓடி ஒளியும் 122

தமிழக சட்டமன்றத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணியின் 12 எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்றபோது பொதுமக்களால் வரவேற்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது