இன்று முதல் அடுத்தகட்டத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

  • IndiaGlitz, [Wednesday,June 14 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதையும் இன்னும் பத்து நாட்கள் பேட்ச்வொர்க் மட்டுமே மீதமிருப்பதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

இன்று பூஜையுடன் தொடங்கிய டப்பிங் பணியில் சிவகார்த்திகேயன், மோகன் ராஜா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இன்று முதல் சிவகார்த்திகேயன் தனது பகுதியின் காட்சிகளுக்கு டப்பிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முதலாக சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடி சேரும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத்பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சினேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.