சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Saturday,November 07 2015]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்த 'ரஜினிமுருகன்' ரிலீஸ் குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவராத நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கிவிட்டது.

ஏற்கனவே இந்த படத்தின் ஒருசில காட்சிகள் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் படமாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் நேற்று கோயம்பேடு ரயில் நிலையத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் படக்குழுவினர் நேற்று படப்பிடிப்பை நடத்தினர். சென்னை மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.4 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளை தவிர வேறு யாரும் நுழைய முடியாது என்பதால் எந்தவித இடையூறுகளும் இன்றி படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

More News

'வேதாளம்' வெற்றிக்காக அஜீத்தின் ஆலய விசிட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்னர் திருப்பதி சென்று ஏழுமலையானை...

அமெரிக்க தொழில்நுட்பத்தை இந்தியா கொண்டு வரும் கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 61வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்...

அஜீத்தின் 'வேதாளம்' - ஒரு முன்னோட்டம்

'வீரம்' படத்தை முடித்தவுடன் இயக்குனர் சிவாவின் மீது அதீத நம்பிக்கை வைத்த அஜீத், 'நாம் இருவரும் இணைந்து மீண்டும் படம் பண்ணலாம்' என வாக்கு கொடுத்தாராம்.....

'சிங்கம் 3' படப்பிடிப்பு ஆரம்பமாகும் தேதி?

சூர்யா-ஹரி கூட்டணியில் வெளியான 'சிங்கம்', சிங்கம் 2' ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து 'சிங்கம் 3'....

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸ் விபரம்

சிம்பு, நயன்தாரா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய 'இது நம்ம ஆளு' திரைப்படம் வரும் நவம்பரில் பாடல் வெளியீடும்....