close
Choose your channels

சிவகார்த்திகேயன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

Friday, January 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ’டான்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் தமிழ், தெலுங்கு திரைப்படம் ஒன்றை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் 20வது படமான இந்த படம் பொங்கலுக்கு முன்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்த நிலையில் அடுத்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாகவும், இதில் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒருவர் வெளிநாட்டு நடிகை என்றும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் டூரிஸ்ட் கைடாக நடிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுவை, சென்னை மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.