சிவகார்த்திகேயன் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Friday,January 28 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ’டான்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் தமிழ், தெலுங்கு திரைப்படம் ஒன்றை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயனின் 20வது படமான இந்த படம் பொங்கலுக்கு முன்னரே படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்த நிலையில் அடுத்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருப்பதாகவும், இதில் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒருவர் வெளிநாட்டு நடிகை என்றும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் டூரிஸ்ட் கைடாக நடிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுவை, சென்னை மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

குப்பையில் கிடந்த நாற்காலி 12 லட்சத்திற்கு விற்கப்பட்ட அதிசயம்!

ஆஸ்திரியா நாட்டில் குப்பையில் கிடந்த ஒரு நாற்காலி 16,000 டாலருக்கு விற்கப்பட்டு இருப்பதோடு

விஜய் கார் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து ரோல்ஸ்ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்த நிலையில் அந்த காருக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என விஜய் வழக்கு பதிவு செய்திருந்தார்.

'நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பாய்': காதலர் பிறந்த நாளில் பிரியா பவானிசங்கரின் பதிவு!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் பத்து வருடமாக ஒரு இளைஞரை காதலித்து வரும் நிலையில் தனது காதலரின் பிறந்த நாளை அடுத்து 'நீ ஒரு மோசமான டீன் ஏஜ் பாய்' என பதிவு செய்து வாழ்த்து .

டைட்டானிக் போஸில் ஆர்யா-சாயிஷா: ஜாலியான ஹாலிடே புகைப்படம்!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான ஆர்யா மற்றும் சாயிஷா டைட்டானிக்  ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

தெலுங்கில் தடம்பதிக்கும் ஜான்வி கபூர்… ரசிகர்களை குஷிப்படுத்தும் தகவல்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிகளின் மூத்த மகளான ஜான்வி கபூர்