சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் 'தெறி' கனெக்சன்?

  • IndiaGlitz, [Saturday,September 22 2018]

சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் கலவையான விமர்சனத்தையும் தாண்டி இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும், ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் - எம்.ராஜேஷ் கூட்டணியில் உருவாகி வரும் படத்திற்கு 'ஜித்து ஜில்லாடி' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் நடித்த 'தெறி' படத்தில் இடம்பெற்ற ஜித்து ஜில்லாடி என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டான பாடல் என்பதும், இந்த பாடலின் முதல் வரி சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

டைட்டில் வின்னர் யார்? பிக்பாஸ் மாஸ்டர் பிளான் இதுதானா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேறுகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த இருவரும் வெளியேறிவிட்டால் மீதி இருப்பவர்கள் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி மற்றும் ரித்விகா.

இந்த வாரம் வெளியேறும் இருவர் இவர்கள்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப்போகும் இருவர் யார்? என்பதை அறிந்து கொள்வதில் நமது வாசகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பது அறிந்ததே.

பிக்பாஸ்2: நல்லவர் யார்? கெட்டவர் யார்? இன்னுமா தெரியலை?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்ட நிலையில் இன்றைய புரமோவில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று கமல்ஹாசன் கூறுகிறார்.

பிக்பாஸ் 2: இந்த வாரம் வெளியே போவது யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் இந்த வாரம் ஆண்ட்டி கிளைமாக்ஸ் ஆக இரண்டு நபர்கள் வெளியேற உள்ளனர். அவர்கள் யாராக இருக்கும்?

விஜய்சேதுபதி-த்ரிஷாவுடன் மோதும் விஷ்ணுவிஷால்

விஷ்ணுவிஷால் நடிப்பில் இந்த ஆண்டு இன்னும் ஒரு படம் கூட வெளிவராத நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'ராட்சசன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.