நெல்சன் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா?

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டாக்டர்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்தினை பார்த்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பதும் விமர்சகர்கள் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’டாக்டர்’ வெற்றியை அடுத்து நெல்சன் இயக்கி வரும் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் நெல்சனுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை முடித்துவிட்டு நெல்சன் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் மீண்டும் சிவகார்த்திகேயன் - நெல்சன் கூட்டணியில் ஒரு வெற்றி படம் உறுதி என்றே கூறலாம்.

More News

சாமி சத்தியமா சொல்றேன்: கமல்ஹாசனை சிரிக்க வைத்த தாமரை செல்வி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக சுவராசியமாக கொண்டு சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு வாரம் ஆகியும் இன்னும் நிகழ்ச்சி ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது, யாரும் சண்டை போட மாட்டேன்

பிரபல மாஸ் நடிகருடன் இணைந்து பாடிய ஷிவாங்கி!

சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கி தற்போது பிரபல மாஸ் நடிகருடன் இணைந்து பாடியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

கோவிட் நேரத்தில் ஒரு சிரிப்பு மருந்து: 'டாக்டர்' படம் குறித்து பிரமாண்ட இயக்குனர்! 

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை

இரண்டு பிரபலங்கள் இணையும் படத்தின் டைட்டில் 'கோல்மால்'

தமிழ் திரையுலகில் இரண்டு பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு 'கோல்மால்'என்ற டைட்டில் வைக்கப்பட்டு, டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

சூர்யாவின் 'ஜெய்பீம்' படம் குறித்த சூப்பர் அப்டேட்: வைரல் வீடியோ!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' என்ற திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது