சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினி பட டைட்டிலா?

  • IndiaGlitz, [Friday,February 17 2017]

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், ஜெயம் ராஜா இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று மதியம் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு 'வேலைக்காரன்' என்ற டைட்டில் தான் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதி செய்வதை போல் சிவகார்த்திகேயனின் விக்கிபீடியா பக்கத்தில் இந்த டைட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே டைட்டிலில் கடந்த 1987ஆம் ஆண்டு ரஜினிகாந்த், அமலா நடிப்பில் கே.பாலசந்தர் தயாரிப்பில் எஸ்.பி,.முத்துராமன் இயக்கத்தில் ஒரு படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிபீடியா பக்கத்தில் பதிவு செய்திருப்பது உண்மையா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

முதல்முறையாக கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடித்து வருகிறார். மேலும் சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பிராமையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கின்றார். 'ரெமோ' படத்தை தயாரித்த 24ஏம் ஸ்டுடியோஸ் இந்த படத்தையும் தயாரிக்கின்றது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது.

More News

தமிழ்நாட்டில் இப்போதுதான் பிரச்சனை தொடங்கியுள்ளது. நடிகை ஸ்ரீபிரியா

தமிழகத்தின் 13வது முதல்வராக நேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். நாளை கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

பத்தாம் வகுப்பை கூட பாஸ் செய்யாத சசிகலா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக முதல்வராக பதவியேற்று மக்களின் மனங்களை வென்ற ஓபிஎஸ் அவர்களை திடீரென ராஜினாமா செய்ய வைத்து, முதல்வர் பதவியில் அமர முயன்ற சசிகலாவுக்கு விதி ஜெயில் பாதையை வழிகாட்டிவிட்டது. இதனால் அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தற்போது முதல்வராகியுள்ளார்...

சனிக்கிழமை கூடுகிறது சட்டமன்றம். பெரும்பான்மை கிடைக்குமா?

தமிழக முதல்வராக இன்று மாலை பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 15 நாள் அவகாசம் கவர்னர் கொடுத்திருந்த போதிலும் வரும் சனிக்கிழமையே சட்டமன்றத்தை அவர் கூட்டி நம்பிக்கை வாக்கு கோரப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அடுத்த 4 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் சிறை ஆட்சி. மார்க்கண்டேய கட்ஜூ வேதனை

தமிழகத்தின் முதல்வர் பதவியை கைப்பற்ற தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்த சசிகலாவுக்கு கடைசியில் கிடைத்தது ஜெயில் தண்டனைதான்.

பதவியேற்ற பத்து நிமிடத்தில் வன்முறை. ஓபிஎஸ் வீடு மீது கல்வீச்சு

சசிகலா ஆதரவு அணியின் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு கவர்னரின் அழைப்பின் பேரில் கடந்த சில மணி நேரங்களுக்கு முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில நிமிடங்களில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும்,