சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்த ஹன்சிகா

  • IndiaGlitz, [Thursday,November 05 2015]

கடந்த வருடம் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது இணைந்துள்ளார். ஆனால் இம்முறை ஹன்சிகா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து சித்தார்த் நடித்த 'ஜில் ஜங் ஜக்' என்னும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் தயாரித்து நடித்து வரும் திரைப்படம் 'ஜில் ஜங் ஜக்'. இந்த படத்தின் போஸ்டரை சமீபத்தில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட நிலையில், நாளை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகவுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் டீசரை சிவகார்த்திகேயனும் ஹன்சிகாவும் இணைந்து வெளியிடவுள்ளனர்.

சித்தார்த், சனாந்த் ரெட்டி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் தீரஜ் வைத்தி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் இம்மாத இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

More News

மலேசியாவில் இருந்து சென்னை திரும்புகிறாரா ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

'எந்திரன் 2' படத்தில் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்?

ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 'எந்திரன்' படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து தற்போது ஷங்கர் 'எந்திரன் 2' படத்திற்கான...

தூங்காவனம் - கபாலி ஒரு அபூர்வ ஒற்றுமை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

நயன்தாராவின் ரீமேக் படத்தில் அஜீத்?

'சிறுத்தை சிவா' இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் அஜீத்தின்....

'வேதாளம்': அஜீத் உறவினர்களுக்காக சிறப்பு காட்சி

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது...