சிவகார்த்திகேயன் - பொன்ராம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,November 20 2017]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'வேலைக்காரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் வரும் டிசம்பரில் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படத்தின் படப்பிடிப்பு 55 சதவீதம் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சூரி, சிம்ரன் உள்பட பலர் நடித்து வரும் இந்தா படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களை அடுத்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணி ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

'தல'யின் 'தலைவி ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தல அஜித்தின் தலைவியும், நடிகையுமான ஷாலினி அஜித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் IndiaGlitz அவருக்கு உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

குற்றவாளிகள் நாடாளக்கூடாது! டுவிட்டரில் பொங்கிய கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டரில் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் சமூக விழிப்புணர்வுகளுக்கான புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

த்ரிஷாவுக்கு யூனிசெப் அமைப்பு கொடுத்த மிகப்பெரிய கெளரவம்

நடிகை த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று: கார்த்தியின் மிகச்சிறந்த ஓப்பனிங் வசூல் படம்

தமிழ் சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த போலீஸ் படங்களில் ஒன்றாகவும், கார்த்திக்கு வாழ்நாளில் மறக்க முடியாத படமாகவும் விளங்கி வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று'

தமிழ் இருக்கைக்கு நிதிதிரட்ட மொய்விருந்து நடத்திய டெக்சாஸ் தமிழர்கள்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், சீனம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் பெர்சியம் ஆகிய 7 மொழிகள் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது