நாலு லைக்கு, எட்டு ஷேருக்கு இப்படியெல்லாம் பேசாதிங்க: சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்

  • IndiaGlitz, [Wednesday,July 15 2020]

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் கந்தசஷ்டி விவகாரம் பெரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதும், கந்தசஷ்டி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோவை வெளியிட்ட நபருக்கு கண்டனம் தெரிவித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் முருக பக்தர்களும் பாஜகவினரும் இந்துமத ஆதரவாளர்களும் கந்தசஷ்டியை அவதூறு செய்த நபரின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’அயலான்’ என்ற படத்தை தயாரிக்கும் நிறுவனமுமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது.

முருகர் துதி பாடுவோம், 'பெருமாளே'னு துதிப்போம். அதே நேரம், நம்ம பசங்களுக்கு ஒன்னுனா முன்ன வந்து நிக்குறதும் நாங்கதான்டா! #KarupparKoottam - நாலு likeகு, எட்டு shareகு வேண்டி கண்டதையும் பேசாதீங்க! வாழு, வாழ விடு - இதுதான் நம்ம பண்பாடே. அது தெரியாம வந்துட்டானுங்க mic-அ தூக்கிட்டு!.

இந்த டுவீட்டுக்கு ஆதரவாக ஏராளமான கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல அரசியல் கட்சியில் முக்கிய பதவியை பெற்ற தனுஷ் தந்தை

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் சமீபத்தில் கட்சியில் ஒருசில அதிரடி மாற்றங்கள் செய்ததோடு, புதிய நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்தார்

ரூ.20 கோடி சம்பளத்தை குறைத்தாரா விஜய்? பரபரப்பு தகவல்

தளபதி 65’ படத்திற்காக விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருந்ததாகவும் இந்த சம்பளம் ’அண்ணாத்தத’ படத்தில் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளத்தை விட அதிகம் என்றும் கூறப்பட்டது

முதல்முறையாக மாவட்ட ஆட்சி தலைவருக்கு கொரோனா உறுதி: பெரும் பரபரப்பு

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கொரோனா அரசால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது

கொரோனா உயிரிழப்பு: இறுதிச்சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் நிதியுதவி!!! கெத்துக் காட்டும் ஒரு மாநிலம்!!!

ஆந்திர மாநிலத்தில் நேற்று கொரோனா பரவல் தடுப்புக்காக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!!! தமிழக அரசின் புது நடவடிக்கை!!!

தமிழக அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ இட ஒதுக்கீட்டில் இடம் பிடிப்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது