close
Choose your channels

சிபிராஜின் அடுத்த படத்திற்கு உதவி செய்த சிவகார்த்திகேயன்

Monday, August 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ரங்கா'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1982ஆம் ஆண்டு நடித்த படத்தின் டைட்டிலில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி அதாவது நாளை மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

இந்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதளங்களில் வெளியிட்டு படத்தின் புரமோஷனுக்கு உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சதீஷ், சுஜாதா பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். ராம்ஜீவன் இசையில் ஆர்வி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை பாஸ் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

நடிகர் சிபிராஜ் இந்த படத்தை தவிர கிஷோர் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாயோன்' மற்றும் அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வால்டர்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் 'சத்யா' பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படம் ஒன்றிலும் சிபிராஜ் தனது தந்தை சத்யராஜ் உடன் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.