Download App

சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படத்தை வெளியிட்ட சீமராஜா சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. மாஸ் நடிகர்களுக்கு இணையாக இந்த படமும் சென்னையின் பல திரையரங்குகளில் அதிகாலை காட்சி திரையிடப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நகைச்சுவை கேரக்டரில் நடித்திருக்கும் சூரி, சிக்ஸ்பேக் தோற்றத்துடன் வருவதாக படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இருப்பினும் சூரியின் சிக்ஸ்பேக் உடலமைப்பு குறித்த புகைப்படம் இதுவரை வெளிவராமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் சூரியின் சிக்ஸ்பேக் தோற்றம் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த சிக்ஸ்பேக் உடலமைப்பிற்காக சூரி, எட்டு மாதங்கள் கஷ்டப்பட்டு உழைத்ததாகவும், அவருடைய கடின உழைப்பிற்கு தனது பாராட்டுக்கள் என்றும் சிவகார்த்திகேயன் குறிப்ப்பிட்டுள்ளார்.