close
Choose your channels

நிறைவடையும் நிலையில் 'ரெமோ' பாடல்கள்

Wednesday, March 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
பீப் பாடல் பிரச்சனையில் இருந்து கிட்டத்தட்ட மீண்டு வந்துவிட்ட இளம் இசையமைப்பாளர் அனிருத் தற்போது தனது கவனம் முழுவதையும் இசையமைப்பில் செலுத்தி வருகிறார். முதல்கட்டமாக சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதில் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டிருந்த அனிருத் தற்போது இந்த படத்தின் பாடல்களை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'ரெமோ' படத்திற்காக இன்னும் ஒரே ஒரு பாடலை மட்டுமே அனிருத் கம்போஸ் செய்யவுள்ளதாகவும் அந்த ஒரு பாடலையும் இந்த வாரத்திற்குள் அவர் முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் மே இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கும் 'ரெமோ' படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.