என் தங்கச்சிக்கு மார்க் கொஞ்சம் பாத்து போடுங்க: சூப்பர் சிங்கர் ஜட்ஜ்களிடம் சிவகார்த்திகேயன் கோரிக்கை..!

  • IndiaGlitz, [Wednesday,February 21 2024]

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி ஒருவரை பார்த்து இவர் என் தங்கச்சி, மார்க்கை கொஞ்சம் பார்த்து போடுங்க என ஜட்ஜ்களிடம் சிவகார்த்திகேயன் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இதில் பாடகர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் வரும் வாரம் தல ,தளபதி படங்களிலிருந்து பாடல்களை போட்டியாளர்கள் பாடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொண்ட பாடகர்களில் ஒருவர் தன்சீரா. இவர் சிவகார்த்திகேயன் மிக தீவிரமான ரசிகை என்பதை தெரிந்து கொண்ட விஜய் டிவி குழுவினர் அவரை சஸ்பென்ஸ் ஆக சிவகார்த்திகேயனிடம் அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

சிவகார்த்திகேயனை பார்த்தவுடன் துள்ளி குதித்து கட்டிப்பிடித்துக் கொண்ட ரசிகை தன்சீராவுடன் சிறிது நேரம் உரையாடிய சிவகார்த்திகேயன், அதன்பின்னர் சூப்பர் சிங்கர் ஜட்ஜ்களிடம் 'இது என் தங்கச்சி, எனவே மார்க்கை கொஞ்சம் பார்த்து போடுங்க’ என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை.. விஜய்யை மறைமுகமாக தாக்குகிறாரா கமல்?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், 'தளபதி 69' படத்திற்கு பின் நடிக்க மாட்டேன் என்றும் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன்

அடுத்தகட்ட பணியை தொடங்கிய சூர்யா.. ரிலீசை நோக்கிய 'கங்குவா' திரைப்படம்..!

நடிகர் சூர்யா நடித்து வந்த 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தகவல் வெளியானது

நான் இன்னும் லேடி சூப்பர் ஸ்டார் தான்.. முதல் பாலிவுட் படத்திற்கே விருது பெற்ற நயன்..!

நடிகை நயன்தாரா பாலிவுட் திரையுலகில் முதல் திரைப்படமாக ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்த நிலையில் முதல் பாலிவுட் திரைப்படத்திற்கு அவருக்கு விருது கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோளோடு சாய்ந்து ரொமான்ஸ்.. லிப் கிஸ் முத்தம்.. கர்ப்பிணி அமலாபால் க்யூட் வீடியோ..!

நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் தனது கணவருடன் ரொமான்ஸ் ஆக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்

விராத்-அனுஷ்காவுக்கு கிடைத்த விலை மதிப்பில்லா பொக்கிஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா தம்பதிக்கு விலை மதிப்பில்லா பொக்கிஷம் கிடைத்துள்ளததை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.