close
Choose your channels

ரிலீசுக்கு தயாராகும் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள்

Monday, February 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளது

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகியதை அடுத்து அவருடைய அடுத்த தயாரிப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இன்று முதல் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. அதற்கான பூஜையில் இன்று படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் 'சரவணன் மீனாட்சி' புகழ் ரியோ ராஜ் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஷ்ரினும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ளார்.

இந்த படமும் மே இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் மே மாதம் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.