close
Choose your channels

இதுவரை வெளிவராத புகைப்படத்தை வெளியிட்டு அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்!

Saturday, May 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு வருகின்றனர். பல பிரபலங்கள் அவருடன் நடித்த அனுபவங்களையும், தங்களுடைய மலரும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித்துடன் எடுத்த ஒரு அரிய புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார், அஜித் நயன்தாரா நடித்த ’ஏகன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்து இருந்தார். ஆனால் அந்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஜீத்துடன் நடித்த போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளதாவது:

நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள்.

பேரன்புடன்
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.