close
Choose your channels

ஜூன் 21ல் சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸ்!

Friday, June 7, 2019 • தமிழ் Comments

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன் தற்போது நடிப்பு மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. தயாரிப்பாளர், பாடலாசிரியர் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் அவர் தற்போது ஒரு பாடலையும் பாடி பாடகராகவும் மாறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' படத்தின் நாயகன் தர்ஷன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தும்பா'. இந்த படத்தில் தயாநிதி சந்தோஷ் இசையில் சிவகார்த்திகேயன் 'ஹம்ப்டி டம்ப்டி' என்று தொடங்கும் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடல்தான் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில் இந்த பாடல் மூன்றாவது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்ஷன், கீர்த்திபாண்டியன், தீனா உள்பட பலர் நடித்துள்ள 'தும்பா' படத்தை ஹரிஷ் ராம் இயக்கியுள்ளார். அனிருத், சந்தோஷ் தயாநிதி, விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.


 

Get Breaking News Alerts From IndiaGlitz