close
Choose your channels

இன்னா மயிலு, யாரை பார்த்து முறைச்சுகினே: வைரலாகும் சிவகார்த்திகேயன் பாடல்!

Thursday, April 22, 2021 • தமிழ் Comments

பிக்பாஸ் கவின் நடித்துள்ள ’லிப்ட்’ என்ற திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த பாடலை சிவகார்த்திகேயன் பாட உள்ளார் என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த பாடல் சற்று முன் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. ’இன்னா மயிலு, யாரை பார்த்து முறைச்சுகினே’ என்று தொடங்கும் இந்த பாடலை சிவகார்த்திகேயன், பூவையார், கமலகண்ணன், ராஜேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். பிரிட்டோ மைக்கேல் இசையில் நிஷாந்த் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கவின் ஜோடியாக ‘பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடித்துள்ள இந்த படத்தை வினோத் வரப்பிரசாத் இயக்கியுள்ளார். ஜீவா ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz