ஸ்பைடர்மேன் என்றால் சிவகார்த்திகேயன்.. கேப்டன் அமெரிக்கா என்றால் சூர்யா.. சொன்னது யார் தெரியுமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


ஸ்பைடர் மேன் என்றால் சிவகார்த்திகேயன், கேப்டன் அமெரிக்கா என்றால் சூர்யா என மாஸ் நடிகர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நடித்த அடுத்த படம் ஹிட் படத்தின் மூன்றாம் பாகம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. மேலும் நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்
அந்த வகையில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் மார்வெல் படத்தை இங்கே எடுத்தால் எந்தெந்த நடிகர்களை என்னென்ன கேரக்டர்களுக்கு தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாபாத்திரங்களின் பெயரை ஒன்றாக குறிப்பிட, நானி அதற்கு பொருத்தமான நடிகர்களை கூறினார்.
குறிப்பாக ஹல்க் என்றால் பிரபாஸ், தார் என்றால் ராம்சரண், ஸ்பைடர் மேன் என்றால் சிவகார்த்திகேயன், கேப்டன் அமெரிக்கா என்றால் சூர்யா, ப்ளாக் பாந்தர் என்றால் அல்லு அர்ஜுன், ஆண்ட்மேன் என்றால் துல்கர் சல்மான் என்று கூறிய நானி, நான் தான் அயன் மேன் என்றும் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com