இரண்டாம் பாகமாக உருவாகிறதா சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படங்கள்?

  • IndiaGlitz, [Wednesday,October 06 2021]

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான இரண்டு படங்களில் ஒன்று இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக சமீபத்தில் அவர் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவான ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. அதே போல் அவர் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படம் ’ரெமோ’. இந்த இரண்டு படங்களில் ஒன்றை இரண்டாம் பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான பல திரைப்படங்கள் இரண்டாம் பாகமாக உருவாகி ஒரு சில படங்கள் வெற்றியும் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அல்லது ‘ரெமோ’ திரைப்படம் இரண்டாம் பாகமாக உருவாகினால் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ’டாக்டர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார் என்பதும் அந்த படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார் என்பதும் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

செல்வராகவன் வீட்டு விசேஷத்தில் நடிகர் தனுஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களாக இயக்குநர் செல்வராகவனும், நடிகர் தனுஷ்ஷும் விளங்கி வருகின்றனர்.

பிக்பாஸ் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவியின் அதிர்ச்சி அறிவிப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான அபிஷேக் ராஜா, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பின்னரும் தன்னுடைய விமர்சனத்தை தொடர்ந்து செய்து வருகிறார் என்பது நேற்றைய எபிசோடு பார்த்தவர்கள்

நம்மல ஒதுக்குறாங்கன்னா, செதுக்குறாங்கன்னு அர்த்தம்: இசைவாணி ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்கள் ஒரு சிலர் தவிர கிட்டத்தட்ட அனைவருமே ஏழ்மை நிலையிலிருந்து பல கஷ்டங்களை அனுபவித்து, பல போராட்டங்களை சந்தித்து, பல சவால்களை சந்தித்து

விவசாயிகள் படுகொலை… சொந்த கட்சிக்கு எதிராக நடிகை குஷ்பு காட்டம்!

உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும்,

பெருசு, ஐ டிராப்ஸ் போட்டியா? பிக்பாஸை வச்சு செய்யும் ப்ரியங்கா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பெரும்பாலானோர் புதியவர்களாக இருந்தாலும் பிரியங்கா மற்றும் ராஜூ ஜெயமோகன் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கிய வருகின்றனர்