நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர உழைப்பேன்.. சிவகார்த்திகேயன் அறிக்கை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் அவர் நடித்து வரும் ’பராசக்தி’ மற்றும் ’மதராஸி’ ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தன்னை வைத்து திரைப்படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், பர்ஸ்ட் லுக் வெளியிட்ட படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்னுடைய பிறந்த நாளில் பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்து அதை மறக்கமுடியாத நாளாக மாற்றிய அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணையதள, சமூக ஊடகங்கள், பண்பலை, நண்பர்களுக்கும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும், என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
“ மதராஸி ” படத்தின் முன்னோட்டத்தினை வெளியிட்ட படகுழுவிற்க்கும் அதற்கு அனைவரும் அளித்த பேராதரவிற்கும் நன்றி.
தற்போது படப்பிடிப்பில் உள்ள “ பராசக்தி ” படகுழுவின் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி.
எனது அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பியதோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர்.
உங்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பைவிட இன்னும் அதிகமாக உழைப்பேன்.
Thank you and love you all ❤️ pic.twitter.com/oKko2GQOvo
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 18, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments