close
Choose your channels

மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் சிவகார்த்திகேயன்!

Friday, December 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிக்க வந்த ஆரம்பத்தில் காமெடி கலந்த ரொமான்ஸ் திரைப்படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ரஜினிமுருகன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது அவர் சமீபத்தில் ஆக்சன் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். தற்போது அவர் நடித்து வரும் ’ஹீரோ’ படமும் ஆக்சன் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மீண்டும் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்த ஒரு திரைக்கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள திரைப்படம் ஒரு முழுநீள ரொமான்ஸ் மற்றும் காமெடி படம் என்று கூறப்படுகிறது. அதேபோல் கோலமாவு கோகிலா’ இயக்குனர் நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ படமும் ரொமான்ஸ் காமெடி படம் என்று கூறப்படுகிறது

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியதை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திற்கான தயாரிப்பாளர் இன்னும் செய்யப்படவில்லை. இந்த படத்தை லைகா தயாரிக்கவிருந்து பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.