close
Choose your channels

நீங்க தான் ப்ரோ உண்மையான ஹீரோ: அஸ்வினுக்கு வாழ்த்து கூறிய பிரபல ஹீரோ!

Tuesday, February 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றிக்கு தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மிகப்பெரிய காரணம் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஸ்வினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். ‘நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்தவே முடியவில்லை. கடந்த சில நாட்களாக என்னை விரும்பிய அனைவருக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன். என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த டுவிட்டிற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் கூறியபோது, ‘ப்ரோ, நீங்கள் தான் உண்மையான ஹீரோ. இந்த மைதானத்தில் உங்களுடைய செஞ்சுரியை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் இன்னும் பல உற்சாகமான விளையாட்டை வெளிப்படுத்தும் தருணங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.