இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்.. ஜெய்ஹிந்த்.. நடிகர் சிவகார்த்திகேயன் பதிவு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் இன்று அதிகாலை 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. இந்தியாவில் உள்ள பிரபல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் ஆகியோர் தங்கள் சமூக வலைதளங்களில் இந்திய ராணுவத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனும் "இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்... ஜெய்ஹிந்த்!" என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே 'அமரன்' திரைப்படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்பதும் அந்த புகைப்படத்தை தான் அவர் இன்னும் தனது எக்ஸ் பக்கத்தின் புரொபைல் பிக்சராக வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது இந்திய ராணுவத்தைப் பற்றி பெருமையாக பேசியுள்ளதால், அந்தப் பதிவு லைக்குகள், கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
#OperationSindoor
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 7, 2025
This is the face of the Indian Army
Jai Hind 🇮🇳🫡
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments