close
Choose your channels

சிவகார்த்திகேயனின் செம டான்ஸ்: 'பிரின்ஸ்' புரமோ வீடியோ வைரல்!

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த படம் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 9ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ‘பிரின்ஸ்’ படத்தின் இடம்பெற்ற பாடலின் புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ஆகிய இருவரும் செம டான்ஸ் ஆடி உள்ள காட்சிகள் இருப்பது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.