கவின் படத்திற்காக இணையும் 6 முன்னணி இயக்குனர்கள்!
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான கவின் தற்போது ’லிஃப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் கவின் ஜோடியாக விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தை வரப்பிரசாத் எனப்வர் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோஷன் போஸ்டரை 6 பிரபல இயக்குனர்கள் ஒரே நேரத்தில் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட்பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து மற்றும் ரவிக்குமார் ஆகிய ஆறு இயக்குனர்கள் லிப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.