close
Choose your channels

சிம்புதேவன் படத்தின் ஆறு எடிட்டர்கள் இவர்கள் தான்!

Tuesday, May 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில் 'கசடதபற' என்பதை நேற்று பார்த்தோம். மேலும் இந்த படத்தில் ஆறு ஹீரோக்கள், ஆறு ஹீரோயின்கள், ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள் பணிபுரியவுள்ளனர் என்பதும் இந்த படத்தில் இடம் ஆறு கதைகள் இடம்பெற்றுள்ளது என்பதையும் நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் பணிபுரியும் ஆறு எடிட்டர்கள் குறித்த தகவலை பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் வெளியிட்டுள்ளார். அந்தோணி, காசி விஸ்வநாதன், ராஜா முகமது, விவேக் ஹர்ஷன், ரூபன், பிரவீண் கே.எல் ஆகிய ஆறு பேர் இந்த படத்தின் எடிட்டர்களாக பணிபுரியவுள்ளனர்.

இதனையடுத்து இந்த படத்தில் பணிபுரியும் ஆறு ஒளிப்பதிவாளர்களின் பெயர்களை பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் நாளை வெளியிடவுள்ளார்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்கள் நான்கு கதைகளில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.