3000ஐ தாண்டிய ராயபுரம், 2000ஐ தாண்டிய 3 மண்டலங்கள்: சென்னை தாங்குமா?

சென்னையில் கடந்த 4 நாட்களுக்காக கொரோனாவின் பாதிப்பு தினமும் 1000க்கும் மேல்அதிகரித்து கொண்டே வருவதால் சென்னையில் கொரோனா பரவுதலை தடுக்க சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று முதல் சென்னையில் மேலும் 1000 டாக்டர்கள் கொரோனா தடுப்பு பிரிவில் பணிபுரிவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.. இதன்படி சென்னையின் 15 மண்டலங்களில் 18693 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 3388 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனாம்பேட்டை மண்டலத்தில் 2136 பேர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2123 பேர்களும், தண்டையார்பேடை மண்டலத்தில் 2261 பேர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையின் மூன்று மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டியுள்ளது.

அதேபோல் திருவிக நகர் மண்டலத்தில் 1855 பேர்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 1660 பேர்களும், அடையாறு மண்டலத்தில் 1042 பேர்களும், வளசரவாக்கம் மண்டலத்தில் 975 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணாநகர் ஆகிய ஆறு மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் இம்மண்டலங்களில் சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

More News

தற்கொலைக்காக விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி, திடீரென அலறியதால் பரபரப்பு

தற்கொலை செய்துகொள்வதற்காக லாட்ஜில் ரூம் போட்டு விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடி திடீரென உயிர் பயம் வந்து அலறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மின்கட்டணம் குறித்து கேள்வி எழுப்பிய பிரசன்னாவை பழிவாங்குவதா? முக ஸ்டாலின்

நடிகர் பிரசன்னா சமிபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் மின்வாரியம் குறித்து பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த

கொரோனா நேரத்தில் ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர் மகள் ஐ.நா. வின் நல்லெண்ணத் தூதராக தேர்வு!!!

மதுரை மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் இவர் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

400 பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்!!!

கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் தனது 400 பணியாளர்களை வெளியேற்றும் முடிவினை எடுத்து இருக்கிறது.

கணவருடன் சேரவிடாமல் தடுத்த மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகள்!

வரதட்சனை கொண்டுவா என கொடுமைப்படுத்தி மருமகளை கொலை செய்யும் காலம் மலையேறிவிட்டது என்றும், தற்போது வரதட்சணை கேட்டால் மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்யும் காலம் வந்துவிட்டது