close
Choose your channels

'லியோ' படப்பிடிப்பில் எஸ்.ஜே சூர்யா, பிரதீப் ரங்கராஜன்.. என்ன காரணம்..?

Thursday, June 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'லியோ’ படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த பாடல் காட்சியில் சுமார் 2000 நடன கலைஞர்கள் பங்கேற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ‘பொம்மை’ டிரைலர் ரிலீஸ் விழாவில் லோகேஷ் கனகராஜ், எஸ்ஜே சூர்யா, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக வெளிவந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த விழாவே ‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் தான் நடைபெற்றதாக வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ‘லியோ’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த ’பொம்மை’ ட்ரைலர் விழாவில் எஸ்ஜே சூர்யா கலந்து கொண்டதை அறிந்ததும் விஜய் அவரை அழைத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாகவும், இருவரும் மனம் விட்டு பேசியதை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

’லியோ’ படப்பிடிப்பு தளத்தில் தான் ’பொம்மை’ படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.