ரிலீசுக்கு தயாராகும் எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Tuesday,February 18 2020]

எஸ்.ஜே சூர்யா நடித்த ’மான்ஸ்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் ’பொம்மை’ மற்றும் ’உயர்ந்த மனிதன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவரது நடிப்பில் உருவாகி நீண்ட கால தாமதமாகி உள்ள ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வந்த ‘பொம்மை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே ’மான்ஸ்டர்’படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் சாந்தினி தமிழரசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில், ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படப்பிடிப்பின் இடையே நடந்து வந்ததால் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

பொம்மை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைச்சாச்சு என்றும் டீசர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாகும் என்றும் இயக்குனர் ராதாமோகன் அவர்களுடன் செய்த பயணம் மிகவும் திருப்தியாக இருந்தது என்றும் எஸ்ஜே சூர்யா இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More News

சீனாவில் முடங்கிய மூலப் பொருட்கள்.. மருந்துகள் பற்றாக்குறையால் தவிக்கும் இந்தியா..!

அடுத்த மாதத்தின் முதல் வாரத்திற்குள் பொருட்கள் மீட்டெடுக்கப்படாவிட்டால், ஏப்ரல் முதல் மருந்தகத் தொழில் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் .

குஜராத்திற்கு வரும் டிரம்ப்.. குடிசைவாசிகளை 7 நாட்களில் காலி செய்ய சொல்லும் நகராட்சி..!

டிரம்ப் வருகையை முன்னிட்டு மொடேரா பகுதி குடிசை வாசிகள் 7 நாட்களில் காலி செய்யுமாறு அகமதாபத் நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அளித்துள்ளது.  

புலிகள் காப்பகத்துக்கு உயிர் கொடுத்த தம்பதிகள்- தனி காட்டையே உருவாக்கிய சாமர்த்தியம்

இந்தியாவில் புலிகளை அது வாழுகின்ற இடத்திலேயே வைத்து பார்ப்பதற்காக அமைக்கப் பட்ட சிறந்த இடம்  ரதண்பூர் தேசிய பூங்கா

தாலி அணிவதும் அணியாததும் என் விருப்பம்: சின்மயி அதிரடி

பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதிஜா புர்கா அணிந்து இருப்பது குறித்து முன்னணி எழுத்தாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததற்கு

'டாக்டர்' படத்தில் ஒளிந்திருக்கும் 11.03 ரகசியம் என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும் 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்