கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா: பிரபல நடிகையை பாராட்டிய ஹீரோ!

  • IndiaGlitz, [Saturday,January 11 2020]

அஜித் நடித்த ’வாலி’, விஜய் நடித்த ’குஷி’ உள்பட பல திரைப்படங்களை இயக்கியவரும் மெர்சல், ஸ்பைடர் உள்பட ஒரு சில பல திரைப்படங்களில் நடித்தவருமான எஸ்ஜே சூர்யா தற்போது ’பொம்மை’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ராதாமோகன் இயக்கிய இந்த படத்தில் எஸ்.ஜேசூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பிரியா பவானிசங்கர் நடிப்பை பாராட்டி ’பொம்மை’ படத்தில் ’ப்ரியா பவானிசங்கர் நடிப்பில் கொஞ்சம் சிம்ரன் மற்றும் கொஞ்சம் திரிஷாவின் நடிப்பு இருந்ததாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகளாக நாயகிகளாக புகழ்பெற்ற இரண்டு நடிகைகளுடன் பிரியா பவானிசங்கரை எஸ்.ஜே.சூர்யா ஒப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியா பவானிசங்கர் ஆகிய இருவரும் ’மான்ஸ்டர்’ என்ற படத்தில் நடித்து உள்ளனர் என்பதும் அந்த படம் நல்ல வெற்றியைப் பெற்ற படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டால்தான் என் மகள் திருமணம்: 

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேர்களுக்கும்

65 வயது தயாரிப்பாளர் மீது டீஜ் ஏஜ் நடிகை கூறிய திடுக்கிடும் பாலியல் புகார்!

சமீபத்தில் வெளியான 'ஹோஸ்டேஜஸ்' என்ற திரைப்படம் உள்பட ஒரு சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மல்ஹார் ரத்தோட். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு டீன் ஏஜில் திரையுலகில்

ஒரே நாளில் வெளியாகும் இரண்டு சந்தானம் படங்கள்: ஒரு ஆச்சரிய தகவல்

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகராக இருந்த நடிகர் சந்தானம், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக புரமோஷன் ஆகி, தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

'பட்டாஸ்' ரசிகர்களுக்காக வெளியாகும் 'ஜிகிடி கில்லாடி' : இன்னும் சில நிமிடங்களில்

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படம் சமீபத்தில் சென்சாரில் 'யூ' சான்றிதழ் பெற்று ஜனவரி 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

கணவரையும் கள்ளக்காதலியையும் அடித்து நொறுக்கிய மனைவி: வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல் பிரச்சனையால் குடும்பத்தில் தகராறு, விவாகரத்து மற்றும் கொலை வரை சென்ற செய்திகள் பலவற்றை தினந்தோறும் பார்த்து வருகிறோம்