தெலுங்கிலும் பட்டைய கிளப்பும் எஸ்.ஜே.சூர்யா.. பிரபல நடிகர் படத்தில் இணைந்ததாக அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,January 20 2024]

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்ட எஸ்ஜே சூர்யா தற்போது தெலுங்கு திரையுலகிலும் பட்டையை கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகி வரும் ’கேம் சேஞ்சர்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’சரிபோதா சனிவாரம்’. இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் மற்றும் முக்கிய இடத்தில் சாய்குமார் நடித்து வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் படப்பிடிப்பு முடியும் என்று தெரிகிறது.

ஏற்கனவே தமிழ் திரை உலகில் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ தனுஷின் ’டி50’ விக்னேஷ் சிவனின் ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ போன்ற படங்களில் எஸ்ஜே சூர்யா நடித்து வரும் நிலையில் தற்போது தெலுங்கிலும் பிஸியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மறுமணம்.. மணப்பெண் ஒரு பிரபல நடிகையா?

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

சந்திக்க விரும்பிய ஆக்சன்கிங் அர்ஜூன்.. உடனே அப்பாயின்மெண்ட் கொடுத்த மோடி.. என்ன நடந்தது?

தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடியை சந்திக்க ஆக்சன் கிங் அர்ஜுன் அப்பாயின்மென்ட் கேட்ட நிலையில் உடனடியாக அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்ததாகவும் இதனையடுத்து

புதிய திரைப்படங்கள் வெளியாகாத வெள்ளிக்கிழமை.. என்ன காரணம்?

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது இரண்டு திரைப்படங்கள், அதிகப்படியாக ஐந்து திரைப்படங்கள் வரை  ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். பொங்கல் விருந்தாக நான்கு

உங்கள் மாணவி என்பதில் எனக்கு பெருமை.. பிக்பாஸ் கோப்பையுடன் ஆசிரியரை சந்தித்த பிக்பாஸ் அர்ச்சனா..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அர்ச்சனா வெற்றி பிக் பாஸ் கோப்பையுடன் தனது ஆசிரியரை சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

ஆதிக் ரவிச்சந்திரன் படம் இருக்கட்டும், அதற்கு அடுத்த அஜித் பட இயக்குனர் யார் தெரியுமா? மாஸ் தகவல்..!

நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது