புதிய காதல் உலகத்திற்கு எங்களை அழைத்து செல்கிறார்.. அடுத்த பட இயக்குனர் குறித்து எஸ்ஜே சூர்யா...!

  • IndiaGlitz, [Saturday,December 23 2023]

பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா தனது அடுத்த பட இயக்குனர் தங்களை புதிய காதல் உலகிற்கு அழைத்துச் செல்கிறார் என்று கூறியதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படம் ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

பிரதீப் ரங்கநாதன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யா, ’லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படம் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் நான் ஆகிய மூவரும் இந்த படம் குறித்து அதிகாலை 3 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம், விக்னேஷ் சிவன் கூறிய ஒவ்வொரு காட்சியும் மிகவும் அபாரமாக இருந்தது, எங்களை ஒரு புதிய காதல் உலகிற்கு அழைத்துச் செல்ல மிகுந்த கவனம் செலுத்தி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் நாங்கள் படப்பிடிப்பில் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். எஸ் ஜே சூர்யாவின் இந்த பதிவை அடுத்து இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நான் பார்த்த அந்த அதிர்ச்சி காட்சி.. மனைவியை விவாகரத்து செய்தது குறித்து அஜித் பட நடிகர்..!

தமிழ் நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய தான் பார்த்த ஒரு காட்சி தான் என்றும் அதற்கு மூன்று பேர் காரணம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அன்று என்ன நடந்தது என தினேஷுக்கு இப்ப வரைக்கும் தெரியாது: விசித்ராவின் கணவர் சொன்ன தகவல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'DD3' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்.. வேற லெவலில் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் தனுஷ்..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படமான 'DD3' திரைப்படத்தில் ஏற்கனவே சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள்

அட்லியின் அடுத்த பட ஹீரோ இவரா? அப்ப விஜய்-ஷாருக்கான் படம் என்ன ஆச்சு?

அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தின் ஹீரோ குறித்த தகவல் கசிந்துள்ள நிலையில் விஜய் மற்றும் ஷாருக்கான் படம் என்னாச்சு? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

த்ரிஷாவுக்கு எதிரான மானநஷ்ட வழக்கு.. மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் வைத்த குட்டு..!

நடிகை த்ரிஷா உள்பட 3 பேருக்கு எதிராக மன்சூர் அலிகான் ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.