close
Choose your channels

இந்தியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்படும்: எஸ்.ஜே.சூர்யா அறிவிப்பு!

Monday, August 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

எஸ்ஜே சூர்யா நடித்த திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் கண்டிப்பாக ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் என்று கூறியுள்ளார்

எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’கடமையை செய்’. இந்த படத்தின் ஹீரோ கோமா நிலையில் இருக்கும் போது மூளையில் ஏற்படும் மாறுபாடு காரணமாக அவர் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்பது சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் இருந்து தெரிய வந்தது

வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் நிச்சயம் அவருடைய வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா நேற்று நடைபெற்ற போது இந்த படத்தின் கதையை கேட்கும்போதே தனக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று தான் கணித்ததாகவும் எஸ்,ஜே சூர்யா கூறினார். மேலும் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.