2020க்கு தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Friday,May 17 2019]

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதனையடுத்து அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம், 'இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக உள்ளார்.

இந்த நிலையில் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்கே 14' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சயின்ஸ்பிக்சன் படமான இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படம் அடுத்த ஆண்டு அதாவது 2020ல் தான் வெளியாகும் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் தனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது