close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது?

Tuesday, February 12, 2019 • தமிழ் Comments

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த 'Mr.லோக்கல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.

'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் 'இரும்புத்திரை' படத்தில் வில்லனாக நடித்த ஆக்சன்கிங் அர்ஜூன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் 24 ஏம் ஸ்டுடியோஸ் றுவனத்தின் தயாரிப்பில் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது. 

Get Breaking News Alerts From IndiaGlitz