இதையும் விட்டுவைக்கலையா? பாம்புடன் ஒரு Pre-Wedding போட்டோஷுட் நடத்திய ஜோடி!

  • IndiaGlitz, [Saturday,June 03 2023]

திருமணம் செய்துகொள்ள இருக்கும் சிலர் தங்களது காதல் மற்றும் திருமணத்திற்கு முந்தைய நினைவுகளை சேகரித்து வைப்பதற்காக போட்டோஷுட் நடத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் பாம்புடன் போட்டோஷுட் நடத்திய காதல் ஜோடி குறித்த தகவல் இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.

திருமணம் என்றாலே ஆயிரம் கனவுகள் அடங்கியிருக்கும். அதுவும் காதல் ஜோடிகளுக்கு சொல்லவே தேவையில்லை. இப்படி திருமணம் செய்துகொள்ள இருக்கும் காதலர்கள் மற்றும் தம்பதிகள் சிலர் திருமணத்திற்கு முன்பாக அழகான தங்களது நினைவுகளை பதிவு செய்து வைப்பதற்காக போட்டோஷுட் நடத்தி வருகின்றனர். அதுவும் சமீபகாலமாக திருமணத்திற்கு முன்பு போட்டோஷுட் எடுக்கும் வழக்கம் அதிகரித்து விட்டது.

இதற்காக அழகான இடங்கள், வித்தியாசமான கருதுகோள், மேடை அமைப்புகள் இயற்கை சார்ந்த விஷயங்கள் என்று பல திருமணத் தம்பதிகள் அலைந்து திரிவதைப் பார்க்க முடிகிறது. இன்னும் சிலர் கவர்ச்சியான போட்டோஷுட்டை நடத்தி இணையத்தை அலறவிட்ட சம்பவங்களும் நடைபெற்றிருக்கிறது.

இந்நிலையில் உண்மையான பாம்பை வைத்து ஒரு திருமணத் தம்பதிகள் போட்டோஷுட் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. காரணம் மணப்பெண் தனது வீட்டின் கொல்லைப் புறத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்குவந்த ஒரு பாம்பை பார்த்து பயந்தாராம். இதனால் பாம்பு பிடிக்கும் வீரர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்தப் பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருக்கிறார். இந்தச் சம்பவத்தின்போது பாம்பு பிடிப்பதற்காக வந்த பாம்பு பிடி வீரருடன் அந்தப் பெண்ணிற்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது.

இதையடுத்து தொலைபேசியிலேயே தங்களது காதலை வளர்த்த இந்தக் காதலர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். மேலும் திருமணத்திற்கு முன்பு எடுத்துக்கொள்ளும் போட்டோஷுட்டின் போது தங்களது காதல் கதையை பிரதிபலிக்கும் வண்ணம் பாம்பை வைத்து போட்டோஷுட் நடத்தியுள்ளனர். இந்தப் போட்டோஷுட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி விமர்சனத்திற்கு ஆளாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் மோதல் கதையில் பிரபல நடிகை..!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல் குறித்து உண்மை சம்பவத்தின் கதையில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

லண்டன் வீதிகளில் சிம்பு.. செம்ம மாஸ் புகைப்படங்கள்..!

நடிகர் சிம்பு தனது அடுத்த படத்திற்கு தயாராக லண்டன் சென்றிருந்த நிலையில் லண்டன் வீதிகளில் இருக்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

டாப்சியை இந்த காஸ்டியூமில் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.. வைரலாகும் பிகினி வீடியோ..!

நடிகை டாப்சி வெளிநாட்டு கடற்கரையில் பிகினி உடையில்  இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது.

'குக் வித் கோமாளி' ரவீனாவின் காதலர் ஒரு டான்ஸ் மாஸ்டரா? க்யூட் புகைப்படங்கள்..!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தொலைக்காட்சி சீரியல் நடிகை ரவீனா, டான்ஸ் மாஸ்டர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி, அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை

டைட்டானிக் புகழ் நடிகருடன் டேட்டிங் செய்யும் இந்திய மாடல்… படு சுவாரசியமான தகவல்

உலகப் புகழ்பெற்ற ‘டைட்டானிக்’ திரைப்படத்தில் நடித்து ஹாலிவுட் நட்சத்திரமாக வலம்வரும் லியோனார்டோ டிகாப்ரியோவுடன்