குடும்பமே மஞ்சள் உடை: மங்களகரமான தீபாவளி கொண்டாடிய சினேகா!

  • IndiaGlitz, [Sunday,November 15 2020]

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்றால் கேஆர் விஜயாவுக்கு அடுத்து சினேகா தான் என்று கூறலாம். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்த, நடித்து கொண்டிருக்கும் சினேகா தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த சினேகாவுக்கு விகான் என்ற ஆண் குழந்தை இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது என்பதும், அந்த குழந்தைக்கு சினேகா-பிரசன்னா தம்பதி ‘ஆத்யாந்தா’ என்று பெயரிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படத்தில் சினேகா குடும்பத்திலுள்ள அனைவருமே மஞ்சள் உடையில் மங்களகரமாக உள்ளனர். மஞ்சள் நிற பட்டுச்சேலையில் சினேகா, அதே மஞ்சள் நிற பாவாடை சட்டையில் குட்டி சினேகா ஆத்யாந்தா, மற்றும் பிரசன்ன, விகான் ஆகிய நால்வருமே மஞ்சள் உடையில் மங்களகரமாக இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடினர்

கடந்த ஆண்டு தனுஷுடன் ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்த சினேகா, இந்த ஆண்டு ‘வான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் துல்கர் சல்மான், ப்ரியா பவானிசங்கர் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது