மகள்கள் தினத்திற்கு சினேகா வெளியிட்ட போட்டோ!

  • IndiaGlitz, [Monday,September 27 2021]

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி உலக மகள்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் நேற்று மகள்களை கொண்ட பெற்றோர்கள் தங்களுடைய மகள்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அஜித், விஜய் சூர்யா ரசிகர்கள் தங்களது விருப்பத்துக்குரிய நடிகர்களின் மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகள்கள் தின கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவரான சினேகா தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு மகள்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். என்னுடைய சந்தோஷம், என்னுடைய வலிமை, என்னுடைய பலவீனம், என்னுடைய உலகம் எல்லாமே எனது மகள் தான் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மகளுக்கு சினேகா முத்தம் கொடுப்பது போல இருக்கும் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சினேகா கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த நிலையில் அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினேகா தற்போது ’ஷாட்பூட்’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

More News

சூப்பர் சிங்கர் டைட்டில்: அனு, முத்துச்சிற்பி ஏமாற்றம், பரத்துக்கு இன்ப அதிர்ச்சி!

விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் முத்து சிற்பி, அனு, ஸ்ரீதர்சேனா, பரத்,

'தளபதி 66' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தளபதி விஜய்யின் 66வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது

அதிரடி ஆக்சன் ஹீரோவுடன் 3வது முறையாக இணையும் இளையதிலகம் பிரபு!

தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் ஹீரோ நடிக்கும் படத்தில் இளையதிலகம் பிரபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

'பொன்னியின் செல்வன்' படத்திற்காக ஸ்லிம் லுக்கில் மாறிய பிரபு!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தில்

தீபாவளி ரேஸில் இணையும் அருண்விஜய்யின் ஆக்சன் படம்!

வரும் தீபாவளி திருநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' மற்றும் சிம்பு நடித்த 'மாநாடு' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அருண்விஜய் நடித்த ஆக்சன்