close
Choose your channels

சினேகாவின் குட்டிப்பாப்பாவுக்கு பிறந்த நாள்.. க்யூட் புகைப்படங்கள்!

Tuesday, January 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் புன்னகை அரசியான சினேகாவின் மகள் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

கடந்த 2000 ஆண்டுகளில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்த சினேகா, 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன், ஆத்யந்தா என்ற மகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் சினேகா - பிரச்சன்னா தம்பதியினர் தங்களது குழந்தைகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் இன்று சினேகாவின் மகள் ஆத்யந்தா பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். இந்த நிலையில் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரசன்னா - சினேகா தம்பதிகள் இன்ஸ்டாவில் கூறியதாவது:

இன்றிலிருந்து கொஞ்ச நாளில் நீ வளர்ந்து விடலாம்! ஆனால் என் இதயம் எப்போதும் உன்னுடன் இருக்கும். இன்றிலிருந்து ஒருநாள் நீ பெரிய பெண்ணாக வளரலாம்! ஆனால் எப்போதும் என் குழந்தையாக இருப்பாய். உன் அரவணைப்பு, உன் முத்தங்கள், உன் புன்னகை, உன் கருணை, என் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தம் சேர்க்கிறது. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆத்யந்தா பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் சினேகா பதிவு செய்துள்ள நிலையில் அந்த க்யூட் புகைப்படங்கள் லைக்ஸ், கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.