சிவகார்த்திகேயன் படத்திற்காக சினேகா இழந்தது என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,March 26 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகை சினேகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள சினேகாவுக்கு இயக்குனர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.

அந்த கண்டிஷன் சினேகா தனது உடல் எடையை பத்து கிலோ குறைக்க வேண்டும் என்பதுதான். கடந்த 2015ஆம் ஆண்டு சினேகாவுக்கு குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்துவிட்டது. ஆனால் இந்த படத்தில் அவர் 'ஸ்லிம் ஆக இருக்க வேண்டிய கேரக்டர் என்பதால் இயக்குனர் கண்டிப்பாக பத்து கிலோ எடையை குறைக்க வேண்டும் என்று கூறிவிட்டதால் தற்போது சினேகா அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வரும் சினேகா தற்போது 7 கிலோ எடையை குறைத்துவிட்டதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் மேலும் மூன்று கிலோ எடையை குறைத்து படப்பிடிப்புக்கு தயாராகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் உள்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நடித்து சமீபத்தில் வெளியான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிவருகிறது...

அஜித், அட்லி குறித்து காஜல் அகர்வால் கூறியது என்ன?

அஜித், விஜய் என இரண்டு பெரிய ஸ்டார்களுடன் ஒரே நேரத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் ஏற்கனவே இருவர் குறித்து கூறிய ஒருசில கருத்துக்களை சமீபத்திய செய்திகளில் பார்த்தோம். இந்நிலையில் தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் அஜித், மற்றும் அட்லி குறித்து காஜல் கூறியதை பார்ப்போம்...

பிரகாஷ்ராஜூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்க்கள்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்கள் தமிழ் திரையுலகில் சோடை போனதில்லை என்பது வரலாறு. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல நட்சத்திரங்களை அறிமுகம் செய்த பாலசந்தர் கண்டுபிடித்த இன்னொரு நட்சத்திரம்தான் பிரகாஷ்ராஜ். இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு நம்முடைய உளங்கனிந்த பிறந்த நாளை தெர&#

இலங்கை பயணம் ரத்து: ரஜினியின் முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்..

ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொள்ள ரஜினி இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் இலங்கை செல்லக்கூடாது என்று ஒருசில அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததை அடுத்து இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக சற்று முன் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தார். ரஜினியின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்க

ரஜினி ஒரு கோழை. சுப்பிரமணியன் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று நேரத்திற்கு முன்னர் தான் இலங்கை செல்வதாக திட்டமிட்டிருந்ததை ரத்து செய்வதாக அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்தார்...