close
Choose your channels

2வது குழந்தையுடன் வொர்க்-அவுட் செய்யும் சினேகா: வைரல் வீடியோ

Friday, July 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவர் சினேகா. ’என்னவளே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’ஆனந்தம்’ ’பார்த்தாலே பரவசம்’ ’ஏப்ரல் மாதத்தில்’ ’வசீகரா’ ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராஃப் உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த சினேகாவுக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு இரண்டாவதாக ஒரு மகள் பிறந்தார். இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் சினேகா குழந்தைகளை கவனிப்பது மட்டுமின்றி வொர்க் அவுட் செய்து உடலை ஸ்லிம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

இதனை அடுத்து சமீபத்தில் அவர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் வீடியோவில் தனது வீட்டில் உள்ள ஜிம்மில் ஒருபக்கம் ஆறு மாத கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகளும் விளையாடும் நேரத்தில் அவர் ஒர்க் அவுட் செய்யும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது இந்த பதிவில் கூறியிருப்பதாவது; நான் தற்போது வொர்க் அவுட்டை தொடங்கிவிட்டேன். நாம் தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கின்றோம். இருப்பினும் நம் எதிர்காலம் நம் கையில் தான் உள்ளது. எனவே நம்மை முதலில் ஆரோக்கியமாக வைத்து கொள்வோம். இதுவும் கடந்து போகும்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.