'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த ராகவா லாரன்ஸ் பட நடிகை!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது என்பதும், இந்திய திரை உலகில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை இந்த படத்தில் இணைந்துள்ளார். அவர்தான் ஷோபிதா துலிபாலா. இவர் இவ்வாறு அனுராக் காஷ்யப் இயக்கிய ’ராமன் ராகவ் 2.0’ என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்துவரும் ’காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக் படமான லட்சுமி பாம்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ள இவருக்கு என்ன கேரக்டர் என்பது குறித்த தகவல் வழக்கம்போல் வெளிவரவில்லை. இருப்பினும் இருப்பினும் அவர் இளவரசி கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் ஷோபிதா துலிபாலாவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.