நம்ம PS- நாயகி வானதிக்கு பிறந்தநாள்... அவருக்குள் இத்தனை திறமையா? ஷாக்கான ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Wednesday,May 31 2023]

இயக்குநர் மணிரத்தினத்தின் கனவு திட்டமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகை சோபிதா துலிபாலா. அவர் இன்று பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் அவரைப் பற்றி அறிந்த ரசிகர்கள் பலரும் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இந்திய சினிமாவில் ஸ்டைலிஷான நடிகை மற்றும் பேஷன் விஷயத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்துவரும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கு இன்று 31 ஆவது பிறந்த நாள். பல விருது விழாக்களிலும் போட்டோஷுட்களிலும் இவருடைய ஆடைத் தேர்வு எப்போதும் பாராட்டை குவித்து வருவதைப் பார்த்திருக்கிறோம். அதேபோல சினிமாவிலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்து விசாகப்பட்டிணத்தில் தனது படிப்பை முடித்தவர்தான் சோபிதா துலிபாலா. பள்ளிப் பருவத்திலேயே பேஷன் மற்றும் நடிப்பு விஷயத்தில் படு ஆர்வம் காட்டிவந்த அவர் கதக்களி, குச்சிப்புடி போன்ற நடனங்களை முறையாக பயின்றுள்ளார். மேலும் கல்லூரி பருவத்திலேயே அழகிப் போட்டிகளில் கலந்துகொள்ள முயற்சித்த அவர் சிறுசிறு போட்டிகளில் பரிசுகளையும் வென்றுள்ளார். தொடர்ந்து ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் படத்தை வென்றார்.

மேலும் இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் எர்த் 2013 போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார். இதையடுத்து பாலிவுட்டில் பிரபல இயக்குநர் அனுராக்காஷ்யப் இயக்கத்தில் வெளியான ‘ராமன் ராகவ்’ க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர். அதைத்தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று பல்வேறு மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்தியில் ‘மேட் இன் ஹெவன்‘ திரைப்படத்திலும் மலையாளத்தில் ‘மூத்தோன்‘, ‘குரூப்‘ ஆகிய திரைப்படங்களிலும் தமிழில் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் பேஷன், விளம்பரப் படங்கள், மாடலிங்க் என்று பன்முகத் திறமையுடன் இருந்துவரும் நடிகை சோபிதா துலிபாலாவின் திறமையைப் பாராட்டி 2022 இல் ‘எல்லோ ஜெனரல் இசட் ஸ்டைல் ஐகான்’ விருது வழங்கப்பட்டது.

நடனக் கலைஞர், சூப்பர் மாடல், பேஷன் பியூட்டி என்று பல்வேறு இந்திய சினிமாவில் இளம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

More News

ஹீரோவாகிறார் பிக்பாஸ் 6 போட்டியாளர்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தமிழ் திரையுலகில் ஹீரோவாக உள்ளார் என்றும் அவர் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது

'என் ரசிகரின் அம்மா, என்னோட அம்மா மாதிரி': சூரியின் நெகிழ்ச்சி வீடியோ..!

'என்னுடைய ரசிகரின் அம்மா என்னோட அம்மா மாதிரி' என சூரி நெகிழ்ச்சியுடன் கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் குரல் கொடுக்காதது ஏன்? நடிகர் சித்தார்த் விளக்கம்..!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் சித்தார் சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருவார் என்பதும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவார்

படம் பார்க்காமலே பிரச்சார படம் என்பதா? கமலுக்கு பதிலடி கொடுத்த 'தி கேரளா ஸ்டோரி' இயக்குனர்..!

சமீபத்தில் 'தி கேரளா ஸ்டோரி' என்ற படத்தை விமர்சனம் செய்த உலகநாயகன் கமல்ஹாசன் 'நான் பிரச்சார படங்களை எதிர்ப்பவன் என்றும் உண்மை கதை என்று டைட்டில் இருந்தால் மட்டும் பத்தாது,

பிகினி உடையில் வேற லெவல் போட்டோஷூட்.. ரஜினி, அஜித் பட நாயகியின் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் ஆகியோர்களின் படங்களில் நாயகியாக நடித்த நடிகையின் பிகினி காஸ்ட்யூம் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.