அமெரிக்கா; நடைமுறையில் இருக்கும் சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும்!!! ட்ரம்ப் அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Monday,March 30 2020]

 


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நடைமுறையில் உள்ள சமூக விலகல் ஏப்ரல் 30 வரை தொடரும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அந்நாட்டில் கொரோனா பாதிப்பு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

இதையடுத்து “இறப்பு விகிதங்கள் அதிகரித்து இருக்கிறது. அடுத்த இரண்டு வாரங்களில் இன்னும் அதிகமாகவும் வாய்ப்பிருக்கிறது“ எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை அந்நாட்டில் 135,000 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த வாரத்தில் இருந்த அளவைவிட தற்போது இருமடங்கு அதிகரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலும் இதே நிலைமையே நீட்டிக்கிறது.

அமெரிக்க Johm Hopkins University அறிவியல் அமையம் சேகரித்துள்ள தகவலின்படி ஞாயிற்றுக்கிழமை (நேற்றுவரை) 136,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் 2409 எனவும் குறிப்பிட்டு இருக்கிறது. மேலும், அமெரிக்காவில் வைரஸ் பாதிக்கப்பட்டு 148,000 பேர் மீண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் பொதுமக்கள் சமூக விலகலை வரும் ஏப்ரல் 30 வரை கடைபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.