ரஜினியை சந்தித்த சாப்ட்வேர் நிறுவனத்தின் பிரபலம்.. படம் தயாரிக்க திட்டம் என தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,December 16 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சாப்ட்வேர் நிறுவனத்தின் பிரபலம் ஒருவர் சந்தித்ததாகவும் எதிர்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்து பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓ பாபி பாலச்சந்திரன் என்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். இவர் விரைவில் வெளியாக இருக்கும் அருள்நிதி நடித்த ’டிமான்டி காலனி 2’படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி உடன் ஆன சந்திப்பு குறித்து அவர் கூறுகையில் ’நான் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன், ஆனால் அதே நேரத்தில் அவரது எளிமை மற்றும் பணிவு ஆகியவற்றை பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நாங்கள் இருவரும் சில நிமிடங்கள் சினிமா குறித்தும் இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேசினோம். அவர் ’டிமாண்ட் காலனி 2’ படத்தின் டிரைலர் வெளியீட்டுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்று கூறினார்.

இன்று ’டிமான்டி காலனி 2’ படத்தின் டிரைலர் வெளியாக இருக்கும் நிலையில் அதன் தயாரிப்பாளர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

வேஷம் கலைந்தது.. சாயம் வெளுத்தது.. இந்த வாரமும் ரவுண்டு கட்ட போகும் கமல்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் கடந்த வாரம்  தினேஷ், அர்ச்சனா, நிக்சன், விஷ்ணு உள்ளிட்டோரை வெளுத்து வாங்கினார் என்பதும்  அதன் பிறகு அவர்கள் ஓரளவு திருந்தி இருப்பதாக தெரிகிறது

'சியான் 62' படப்பிடிப்பு எப்போது? விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு குஷி தகவல்..!

நடிகர் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'தங்கலான்' ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62 வது திரைப்படத்தை எஸ்யு அருண்குமார் இயக்க உள்ளார் என்ற

ஹீரோவாக தோத்தவன் இருக்கலாம், வில்லனாக தோத்தவன் யாரும் இல்லை: பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!

 பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்  சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது 'ஹீரோவாக நடித்த தோத்தவன் இருக்கலாம் ஆனால் வில்லனாக நடித்த தோத்தவன் யாரும் இல்லை'

தமிழ் புரியாதவர்களுக்கு இந்த முக்கிய செய்தி: பிரகாஷ்ராஜ் பதிவு செய்த பரபரப்பு ட்விட்..!

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது சுமத்தப்பட்ட மோசடி புகார் பொய்யானது என தமிழ் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ள நிலையில் தமிழ் புரியாதவர்களுக்காக என இந்த செய்தியை நடிகர் பிரகாஷ் ராஜ்

முன்னணி ஹீரோவுடன் முதல்முறையாக இணையும் யோகிபாபு.. த்ரில் காமெடி படம் என தகவல்..!

நடிகர் யோகி பாபு கிட்டத்தட்ட தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முடித்துவிட்ட நிலையில் தற்போது தெலுங்கின் முன்னணி ஹீரோவின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும்